அதிகரிக்கும் மரணங்கள்;‌ ஷாங்காயில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

அதிகரிக்கும் மரணங்கள்;‌ ஷாங்காயில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

1 mins read
87fa16dd-edbb-4b0d-a289-482ba10a4d6c
-

‌ஷாங்­காய்: ‌ஷாங்­கா­யில் மட்­டும் நேற்று கிரு­மித்­தொற்­றுக்கு 11 பேர் மாண்­ட­னர். அங்கு இத்­தனை பேர் மாண்­டது இதுவே முதல் முறை. ‌

இதைத்­தொ­டர்ந்து முடக்­க­நிலை கட்­டுப்­பா­டு­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்த அதன் அதி­கா­ரி­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

முன்­ன­தாக, நேற்று முதல் கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு­இருந்­தது.

ஆனால், ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள முடக்­க­நிலை கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்டு, மக்­கள் தங்­கள் வீட்­டை­விட்டு வெளி­யேற முடி­யாத நிலை தற்­போது ஏற்­பட்­டுள்­ள­து.

கிருமிப் பரவல் மோசமாக உள்ளதால், கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் அவசியம் என்று ‌ஷாங்காய் அரசாங்கம் கூறியது.

நக­ரத்­தின் ஒவ்­வொரு பகு­தி­யி­லும் நோய்த்­தொற்­றின் அபா­யத்­தைப் பொறுத்து கூடு­தல் சோத­னை­கள் நடத்­தப்­படும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.