ஷாங்காய்: சீனாவில் 15 நாள்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆடவர் ஒருவர், அந்த மையத்தின்
100 மீட்டர் நீளமுள்ள நடைபாதையில், கிட்டத்தட்ட 170 கிலோ மீட்டர் ஓடியுள்ளார்.
சமூக ஊழியரான லியு என்ற அந்த ஆடவருக்கு மார்ச் 28ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடும் வேலையால் மனதளவிலும் உடல் அளவிலும் மிகுந்த சேர்வுற்றிருந்த அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது சற்று நிம்மதி அளித்தது.
பிறகு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்ட அவர், முதல் நாளன்று 10 கி.மீ. ஓடினார்.
மையத்தில் இருந்த நாள்களில், அவர் அதிகபட்சமாக ஒரு நாளில் 21 கி.மீ. ஓடியுள்ளார். இது கிட்டத்தட்ட பாதி நெட்டோட்ட தூரத்திற்கு சமம்.
தொற்றுக்கு ஆளானால் கிடைக்கும் உண்மையான அனுபவத்தையும் மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில், தனிமைப்படுத்தல் மையத்தில் நடந்த விஷயங்களைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்த அவர், தமது ஓட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
2019ல் நடந்த மாரத்தான் எனும் நெட்டோட்டத்தில் 40 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 48 நிமிடங்களில் முடித்துள்ளார்.

