வாய் ஓயாமல் பேசியவரைக் குத்துவிட்ட டைசன்

வாய் ஓயாமல் பேசியவரைக் குத்துவிட்ட டைசன்

1 mins read
2843b8b6-3a87-4c1e-a75d-4433129e29e4
-

வா‌ஷிங்டன்: தமது கடு­மை­யான நட­வ­டிக்­கை­யால், அடிக்­கடி சர்ச்­சை­யில் சிக்­கிக்­கொள்­ப­வர் பிர­பல முன்­னாள் குத்­துச்­சண்டை வீரர் மைக் டைசன். தற்­போது சக விமா­னப் பய­ணியை அடித்து, மீண்­டும் சர்ச்­சை­யில் சிக்கி­யுள்­ளார் டைசன்.

அடி­வாங்­கிய நபர் டைச­னின் ரசிகர் என நம்­பப்படு­கிறது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமா­னத்­தில் டைச­னைப் பார்த்­த­தும் அவ­ருக்கு ஒரே ஆனந்­தம். டைச­னு­டன் பேசி புகைப்­ப­ட­மும் எடுத்துக்­கொண்­டார்.

ஆனால், அந்த நப­ரின் வாய் ஓய­வில்லை. கல­க­லப்­பா­க ஆரம்­பித்த உரை­யா­டல், பின்­னர் டைசனுக்கு எரிச்­ச­லூட்ட தொடங்­கி­யது. பல­முறை டைசன் அவரை வாயை மூடச்­சொல்­லி­யும் அவர் காதில் வாங்­க­வில்லை. அடை­யா­ளம் தெரி­யாத அந்த நபர் தண்­ணீர்ப் புட்­டியை டைசன் மீது தூக்­கி­யெ­றிந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

வந்­த­தே டைச­னுக்கு மூக்கு மேல் கோபம். நப­ரின் முகத்தில் ஓங்கி பல­முறை குத்­தி­னார். டைசனின் குத்து இடி­போல் இறங்க அவரின், நெற்­றி­யி­லி­ருந்து ரத்­தம் வழிந்­தது.

இதுகுறித்து காவல்துறை­யி­ல் புகார் செய்­யப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. காயத்துடனும் அதிர்ச்சியுடனும் அமர்ந்திருக்கும் அப்பயணியின் காணொளி இணையத்தில் பரவியது.