பர்ன்லி: பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் சவுத்ஹேம்டன் குழுவை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது பர்ன்லி. நேற்றைய ஆட்டத்தில் முற்பாதியில் ராபர்ட்சும் நேதன் கொலின்சும் ஆளுக்கொரு கோல் போட்டு பர்ன்லியை வெற்றி பெறச் செய்தனர்.
இதன்மூலம் பிரிமியர் லீக் தொடரில் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது பர்ன்லி. இப்பருவத்தில் பர்ன்லியின் ஐந்தாவது வெற்றி இது. அக்குழுவின் நிர்வாகி டைச் சென்ற வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

