ஷாங்காய்: கடும் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான கடுமையான தணிக்கை முறையாலும் ஷாங்காய்
மக்கள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர்.
ஷாங்காயில் கிருமித்தொற்று காரணமாக நேற்று 12 பேர் மாண்டுவிட்டனர். முந்திய நாளில் இது 11ஆக இருந்தது.
நேற்று மாண்டவர்களின் சராசரி வயது 81 எனவும் அவர்கள் அனைவரும் வேறு சில உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஷாங்காய் நிர்வாகம் கூறியது.
மூத்தோருக்கும் எளிதில் தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்களுக்கும் கூடுதல் தடுப்பூசி போடும் பணியை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவில் நேற்று அறிகுறிகளற்ற தொற்றுச் சம்பவங்கள் 20,634 எனவும் அறிகுறியுடன் கூடிய தொற்றுச் சம்பவங்கள் 2,736 எனவும் பதிவானது.

