பள்ளித் திறப்பு: தாய்லாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பள்ளித் திறப்பு: தாய்லாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

1 mins read
e8b88f6e-d270-4dbc-8ad7-f538b1f1e527
-

கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாண்­டு­போன பிள்­ளை­களில்

பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் 5 வய­துக்­கும் குறை­வா­ன­வர்­கள்

பேங்­காக்: தாய்­லாந்­தில் அடுத்த மாதம் முதல் பள்­ளிக்­கூ­டங்­கள் மீண்­டும் திறக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில், மருத்­து­வ­ம­னை­கள் சிறப்பு ஏற்­பா­டு­க­ளைச் செய்கின்றன.

ஜன­வரி மாதம், தாய்­லாந்­தில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாண்டு­போன பிள்­ளை­களில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஐந்து வயதுக்கும் குறை­வா­ன­வர்­கள் என்­பதே அதற்கு கார­ணம். ஐந்து வய­துக்­கு­க்கீழ் உள்ள பிள்­ளை­க­ளுக்­கான தடுப்­பூ­சிக்கு இன்­ன­மும் அனு­மதி அளிக்­கப்­படவில்லை.

ஓமிக்­ரான் பர­வல் கார­ண­மாக அதி­க­ள­வில் பிள்­ளை­கள் தொற்­றுக்கு ஆளா­ன­தாக அந்­நாட்­டின் செய்­தித் தொடர்­பா­ளர் நேற்று சொன்­னார்.

இந்­நி­லை­யில் பள்­ளிக்­கூ­டங்­கள் மீண்­டும் திறக்­கப்­ப­ட­வுள்­ள­தால், அதி­க­மான பிள்­ளை­கள் தொற்­றுக்கு ஆளா­கக்­கூ­டும் என்­ப­தால் மருத்­து­வ­ம­னை­கள் தயார்­நி­லை­யில் இருக்கவேண்டும் என அர­சாங்­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது. அதே­ச­ம­யம் பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போட­வும் அது வலி­யு­றுத்தி வரு­கிறது.

12 முதல் 17 வயது பிள்­ளை­களுக்கு நான்கு அல்லது ஆறு மாத இடை­வெ­ளி­யில் கூடு­தல் தடுப்­பூசி போட­வும் அறி­வு­றுத்­தப்­பட்டு வரு­கிறது. ஐந்து முதல் 11 வய­துக்­குட்­பட்ட பிள்­ளை­க­ளுக்­குப் பள்­ளிக்­கூ­டங்கள் தடுப்­பூசி போட, அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுத்­து ­வ­ரு­கிறது.

தாய்லாந்தின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் 22 விழுக்காடு உயர்ந்துள்ளன. ஆனால், தொற்றுக்கு ஆளாவோர் விகிதம் 19 விழுக்காடு குறைந்துள்ளது.