உக்ரேன் செல்லும் அமெரிக்க உயர் அரசு அதிகாரிகள்

உக்ரேன் செல்லும் அமெரிக்க உயர் அரசு அதிகாரிகள்

1 mins read
648330f9-ea7f-499b-84d6-cc5f9aa798a9
சேதமடைந்த தங்கள் இல்லத்திற்கு முன்பாக நிற்கும் நாடியா,62, நட்டாலியா, 62. படம்: ஏஎஃப்பி -

கீவ்: ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 2 மாந்தங்கள் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் உக்ரேன் தலைநகர் கீவ்வுக்கு வருகை தர உள்ளனர்.

ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் ரஷ்யா அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து உக்ரேனில் படைகளை முன்னேற்றி செல்கிறது.

இதனால் உக்ரேன் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களில் ஒரு தரப்பினர் துப்பாக்கி ஏந்தி தாய்நாட்டை காக்கின்றனர். முதியவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமைடைந்துள்ளனர்.