சீனா லஞ்சம் கொடுக்கிறது: ஆஸ்திரேலியா சாடல்

சீனா லஞ்சம் கொடுக்கிறது: ஆஸ்திரேலியா சாடல்

1 mins read
919a394d-426f-4056-af75-f8381b148f8a
-

சிட்னி: அனைத்துலக ஒப்பந்தங்களைப் பெற சீனா லஞ்சம் கொடுப்பதாக ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் சாடியுள்ளார்.

ஆனால், சாலமன் தீவுகளுடன் சீனா அண்மையில் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்பதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் சீனாவிற்கு எப்படி ஒப்பந்தம் கிடைத்தது என்பது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அரசதந்திர ரீதியில் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பின்னடைவு இது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தீவுகளுடனான ஒப்பந்தம் அப்பகுதியில் சீனாவின் ராணுவ பலம் அதிகரித்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.