கிருமிப் பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டிருந்த பிரேசிலின் புகழ்பெற்ற சம்பா நடனத் திருவிழா இவ்வாண்டு மீண்டும் களைகட்டியது. திருவிழாவின் முக்கிய அம்சமாகப் பாரம்பரிய சம்பா நடனப் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த நடன, இசைக்கலைஞர்கள் குழுவினர் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தினர். வண்ணமயமான உடைகள் அணிந்து அலங்கார ஊர்தியுடன் அவர்கள் ஊர்வலமாகச் சென்றதை ஏராளமான பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.படம்: ஏஎஃப்பி
பிரேசிலில் களைகட்டிய சம்பா நடனத் திருவிழா
1 mins read
-

