ஜப்பான் சுற்றுலாப் படகு விபத்து; குறைந்தது 10 பேர் மரணம்

ஜப்பான் சுற்றுலாப் படகு விபத்து; குறைந்தது 10 பேர் மரணம்

1 mins read
15583203-93ce-41c4-8c1c-511906b69ca6
மாண்டவர்களின் சடலங்களை விமானத்தில் இருந்து மீட்புக் குழுவினர் எடுத்துச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: ஜப்­பா­னில் சனிக்­கி­ழ­மை­யன்று விபத்­துக்­குள்­ளான பட­கில் இருந்து மீட்­கப்­பட்­ட­வர்­களில் 10 பேர் மாண்­டு­விட்­ட­தாக உறு­தி­ப் ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அவர்­களில் ஏழு பேர் ஆண்­கள், மூவர் பெண்­கள் என்று கட­லோர காவல்­படைக் கூறி­யது.

இந்­தச் சுற்­றுலா பட­கில் 2 குழந்­தை­கள் உட்­பட 24 பய­ணி­கள்,

2 ஊழி­யர்­கள் இருந்­த­னர்.

ஹொக்­கை­டோ­வின் வடக்­குத் தீவில் உள்ள ஷிரெ­டோகோ தீப­கற்­பத்­தின் மேற்­குக் கடற்­கரை பகு­தி­யில் சென்­ற­போது பட­கு

­ட­னான தக­வல் தொடர்பு துண்­டிக்­கப்பட்­டது.

உட­ன­டி­யாக, மீட்­புப் பணி­கள் தொடங்­கப்பட்­டா­லும் மற்­ற­வர்­க­ளின் நிலை என்­ன­வென்று தெரி­ய­வில்லை. கட­லோர காவல் படை­யி­னர் 8 குழுக்களாக அப்­ப­கு­தி­யில் தேடும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

மார்ச் மாதத்­தின் பிற்­ப­கு­தி­யில் நீர்­நி­லை­களில் பனிக்­கட்­டி­கள் காணப்­படும் என்­றும் இம்மாதிரியான தண்ணீரில் ஒரு சில நிமிடங்களில் எல்லாம் மாறிவிடும் என்றும் உள்­ளூர் மீன்­பிடி கூட்­டு­றவு அதி­காரி ஒரு­வர் சொன்னார்.