லாகோஸ்: தெற்கு நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் 100 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
கருகிய உடல்கள் சாலைகளிலும் மரக்கிளைகளிலும் சிதறிக் கிடப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குழாய்கள் வெடித்ததில், எண்ணெய் ஆற்றில் கலந்துவிட்டது.
ரிவர்ஸ் மற்றும் இமோ மாநிலங்களுக்கு இடையே இந்த ஆலை செயல்பட்டு வந்தது.
திருட்டுக் கும்பல்கள் எண்ணெய்யைக் களவாட முயற்சி செய்திருக்கலாம் என்றும் அப்போது குழாய் வெடித்து தீப்பற்றி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

