இந்தோனீசியாவில் பாமாயில் ஏற்றுமதித் தடைக்கு ஆதரவு

இந்தோனீசியாவில் பாமாயில் ஏற்றுமதித் தடைக்கு ஆதரவு

1 mins read
83eb4a46-b815-4c2a-a0c9-e278615316c7
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து பாமா­யில் எனும் செம்­பனை எண்­ணெய்யை வெளி­நாட்­டிற்கு ஏற்­று­மதி செய்ய அர­சாங்­கம் விதித்­துள்ள தடைக்கு அந்­நாட்­டின்

செம்­பனை எண்­ணெய் விவ­சா­யி­கள் சங்­கம் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.

உள்­நாட்­டில் சமை­யல் எண்­ணெய்க் கிடைப்­ப­தற்­கும் அது கட்டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய விலை­யில் கிடைப்­ப­தை­ உறுதி செய்­வ­தற்கும் இந்தத் தற்­கா­லிக நட­வ­டிக்கை தேவை என்று அவர்­கள் கூறி­னர்.

உள்­நாட்­டில் பாமா­யி­லின் விலையைக் குறைப்­ப­தற்­கான நட­ வ­டிக்­கை­யாக இம்­மா­தம் 28ஆம் தேதி முதல் பாமா­யில், அதன் மூலப் பொருள் ஆகி­ய­வற்­றின் ஏற்­று­ம­திக்­குத் தடை விதிக்­கப்­படும் என்று அந்­நாட்­டின் அதி­பர் ஜோக்கோ விடோடோ வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அறி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் அர­சாங்­கத்­தின் இந்­ந­ட­வ­டிக்கை பல மில்­லி­யன்­க­ணக்­கான சிறு விவ­சா­யி­க­ளைக் கடு­மை­யா­கப் பாதிக்­கும் என்று சில அர­சி­யல்­வா­தி­கள் விமர்­சித்­த­னர்.

இந்த ஏற்­று­மதித் தடை கார­ண­மாக சோயா எண்­ணெய்­யின் விலை இது­வ­ரை­யில்­லாத அள­வுக்கு உயர்வு கண்­டது.