கோலாலம்பூரில் கனமழை; வெள்ளநீரில் மூழ்கிய பிரதான சாலைகள்

கோலாலம்பூரில் கனமழை; வெள்ளநீரில் மூழ்கிய பிரதான சாலைகள்

1 mins read
b20bc1cc-073f-4942-82da-6f8b51b59c11
-

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 25) பிற்பகல் 3 மணியளவில் பெய்த கனமழை காரணமாக சில பிரதான சாலைகள் வெள்ளநீரில் மூழ்கின.

பாதிக்கப்பட்ட இடங்களைக் காட்டும் புகைப்படங்களை ஒருங்கிணைந்த போக்குவரத்து தகவல் முறை (ஐடிஸ்) சமூக ஊடகங்களில் பகிர்ந்தது.

ஜாலான் பார்லிமன், ஜாலான் செகாம்புட், ஜாலான் குச்சிங், ஜாலான் அம்பாங் உள்ளிட்டவை அந்தச் சாலைகளில் அடங்கும்.

"நகர் மையப் பகுதியில் கனமழை பெய்கிறது. வாகனமோட்டிகள் வாகனம் ஓட்டும்போது கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்," என்று ஐடிஸ் அமைப்பு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.

ஜாலான் புடு, ஜாலான் மகாராஜாலெலா, ஜாலான் துன் ரசாக் போன்ற பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைப் படங்கள் காட்டின.