பேங்காக்: வேகமாக வாகனத்தை ஓட்டி ஒருவரைக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு தாய்லாந்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கண் மருத்துவராக தாம் பணிபுரிந்த மருத்துவமனைக்கு வெளியே சாலையைக் கடந்து கொண்டிருந்த பெண்மீது, மோட்டார்சைக்கிளில் வேகமாகச் சென்ற போலிஸ் அதிகாரியான நோர்விட் புடோக் என்பவர் மோதிவிட்டார். ஜனவரி மாதம் நடந்த இந்த விபத்தின் காணொளி இணையத்தில் பெரிதும் பகிரப்பட்டது.
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை இது கிளப்பியது.
இந்நிலையில், வேகமாக வாகனம் ஓட்டி உயிரிழப்புக்கு காரணமானதற்காக ஈராண்டும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக மேலும் ஒரு மாதமும் அந்த போலிஸ் அதிகாரிக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 8,000 பட் ($323.38) அபராதமும் விதிக்கப்பட்டது.

