'மகிந்த பதவி விலக தயாராக இருந்தார்'

'மகிந்த பதவி விலக தயாராக இருந்தார்'

1 mins read
8e4e622d-a9f9-482c-827f-155b920bf961
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி, ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவரது வீட்டை முற்றுகையிட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

கொழும்பு: இலங்­கைப் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே தாம் பதவி விலக தயா­ராக உள்­ள­தாக புத்த பிக்­கு­கள், கட்­சித் தலை­வர்­கள் உள்­ளிட்ட சில குறிப்­பிட்ட குழுக்­களி­டம் கூறி­ய­தாக முன்­னாள் அமைச்­சர் உதயா கம்­மன்­பிள்ள கூறி­னார்.

பிர­த­மர்­க­ளின் அதி­கா­ரங்­களை தேவை­யற்ற முறை­யில் பயன்­ப­டுத்­து­ப­வர்­கள், அவ­ரைப் பதவி விலக விடா­மல் தடுப்­ப­தாக செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்­றில் கம்­மன்­பிள்ள தெரி­வித்­தார்.

பிர­த­ம­ரிடம் அவர்­கள் தொடர்ந்து இவ்­வாறு நடந்­து­கொண்­டால், தாம் அவர்­க­ளின் பெயர்­களை வெளி­யிட வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

அர­சாங்­கத்­தின் மீதான நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக எதிர்க்­கட்­சி­க­ளி­டம் 120 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு உள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே, மகிந்த ராஜ­பக்சே பதவி வில­கக் கோரி ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­கள் அவ­ரது வீட்டை முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­தி­னர்.

மாண­வர்­க­ளைப் பிர­த­மர் வீட்­டிற்­குள் நுழைய விடா­மல் காவல்­து­றை­யி­னர் தடுத்து நிறுத்­தி­னர்.

ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­ற­போது பிர­த­மர் மகிந்த, அங்கு இல்லை என்றனர் காவல்­து­றையி­னர்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு பதவி விலக வேண்டும் எனக் கூறி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.