பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்றுள்ள இமானுவல் மெக்ரோன், பிளவுபட்டு கிடக்கும் பிரான்சை ஒன்றிணைப்பேன் என்று உறுதி கூறியுள்
ளார்.
20 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்சில் ஆட்சியில் உள்ள ஒருவர் மீண்டும் தேர்வாகிய பெருமையை இமானுவல் மெக்ரோன் பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது சுற்று வாக்குப்பதிவில் மெக்ரோன், 58.55 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். அவரது தீவிர வலதுசாரி போட்டியாளரான மரீன் லீ பென் 41.45 விழுக்காடு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இருப்பினும், 2017ஆம் ஆண்டு லீ பென்னை முதன்முதலில் தோற்கடித்தபோது கிடைத்த வாக்கு வித்தியாசத்தைவிட தற்போதைய வித்தியாசம் குறைவானதாகும்.
மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள மெக்ரோனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

