ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கரகடோவா எரிமலை வெடித்தது. இதனால் விண்ணை நோக்கி 3,000 மீட்டர் உயரத்திற்கு அது சாம்பலைக் கக்கியது.
அனாக் கரகடோவா அதாவது 'கரகடோவாவின் குட்டி' எரிமலையானது ஜாவா, சுமத்ரா தீவுகளைப் பிரிக்கும் நீரிணைக்கு அருகில் சாம்பலைக் கக்கியது.
இதனையடுத்து, அப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கடந்த சில வாரங்களில் அனக் கரகவோடா எரிமலை 21 முறை குமுறியது என்றாலும் நேற்றுதான் பெரிய அளவில் குமுறியதாக அதிகாரிகள் கூறினர். எரிமலை தொடர்ந்து குமுறிக் கொண்டிருப்ப தாகவும் அவர்கள் கூறினர்.
எனவே, அப்பகுதிகளில் விடுக் கப்பட்ட எச்சரிக்கை, இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எரிமலையைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மக்கள் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1883ஆம் ஆண்டில் கரகடோவா எரிமலை வெடித்தபோது, ஏறத்தாழ 35,000 பேர் மாண்டுவிட்டனர்.
அதன் பிறகு உருவான அனாக் கரகடோவா, கடைசியாக 2018ஆம் ஆண்டு வெடித்ததில் 429 பேர் மாண்டனர்.

