டுவீட்டரை வாங்கும் இலோன் மஸ்க்; இந்திய நிர்வாகி பதவி நீக்கம் செய்யப்படலாம்

டுவீட்டரை வாங்கும் இலோன் மஸ்க்; இந்திய நிர்வாகி பதவி நீக்கம் செய்யப்படலாம்

1 mins read
96daad8d-8399-4085-9459-c67bddace414
-

பெருஞ்செல்வந்தரான இலோன் மஸ்க் டுவீட்டர் தளத்தை $60.5 பில்லியன் வெள்ளிக்கு வாங்க முன்வந்துள்ளார். சமூகத் தளம் ஒன்று இந்த விலைக்குபோவது இது முதல்முறை எனக் கூறப்படுகிறது.

டுவீட்டர் தளத்தில் 83 மில்லியன் பேர் உள்ளனர். இதில் பலரும் மஸ்க்கைப் பின்பற்றுகிறார்கள்.

தளத்தில் பேசும் சுதந்திரம் இல்லையென்று மஸ்க் அடிக்கடி குறைகூறிவந்துள்ளார். தம் நிர்வாகத்தின் கீழ் தளம் வரும்போது டுவீட்டர் பயன்படுத்துபவர்கள் பயமின்றி அனைத்து தலைப்புகள் பற்றி கருத்துரைக்கலாம் என்கிறார் மஸ்க்.

டுவீட்டரின் தற்போது நிர்வாகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லையென உலகின் ஆகப் பணக்காரரான மஸ்க் பலமுறை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இந்த விற்பனை குறித்து டுவீட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான பாரக் அகர்வால் டுவீட்டர் ஊழியர்களைச் சந்தித்துள்ளார். நிறுவனம் நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்குவதாகவும், எந்தத் திசையை நோக்கி தளம் செல்லும் என்று தமக்குத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மஸ்க் டுவீட்டர் நிறுவனத்தின் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்போது, அகர்வால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால் அவருக்கு $42 மில்லியன் டாலர் இழப்பீடாக கிடைக்கும் எனக் கூறப்பட்டது.