தோக்கியோ: ஜப்பானில் ஒரு குழந்தை அநேகமாக கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கூடும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படாத அக்
குழந்தையின் வயது பற்றி எந்தத் தகவலும் இல்லை.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள குழந்தைகளிடம் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டு வந்த இந்த கல்லீரல் வீக்கம், முதல்முறையாக ஆசிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 40 விழுக்காட்டினரிடம் அடினோவைரஸ் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜப்பானில் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு அடினோவைரசின் தாக்கம் இல்லை.
இந்த பாதிப்புக்கு ஒரு பிள்ளை மாண்டுவிட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில், கிட்டத்தட்ட
10 விழுக்காட்டினருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் சென்ற வாரம் கூறியது. மேலும் அதிகமான பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இதற்கான காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என்றும் நிறுவனம் கூறியது.
இதற்கிடையே, கொவிட்-19 பரவலுக்கும் கல்லீரல் வீக்க பாதிப்பிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்றும் ஆராயப்படுகிறது.

