பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: நால்வர் மரணம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: நால்வர் மரணம்

1 mins read
85a32d29-5d20-4f8b-b92f-fc96c8d324ff
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் வேன் ஒன்றில் குண்டுவெடித்ததில் சீன நாட்டவர் மூவர், ஒரு பாகிஸ்தானியர் என நால்வர் மாண்டனர். பலூச் லிபரேஷன் படை எனும் கிளர்ச்சிக் குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ராய்ட்டர்சுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில் இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை ஒரு பெண் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. 13 பேர் மாண்ட பேருந்து குண்டுவெடிப்பு நடந்த ஓர் ஆண்டிற்குப் பிறகு, பாகிஸ் தானில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.