நாகேந்திரனின் நல்லுடல் வெள்ளிக்கிழமை ஈப்போவில் அடக்கம் செய்யப்படும்

நாகேந்திரனின் நல்லுடல் வெள்ளிக்கிழமை ஈப்போவில் அடக்கம் செய்யப்படும்

1 mins read
71953735-262c-4100-a68f-7fc2bf6b15a7
நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் நல்லுடல் புதன்கிழமை அன்று சில மணி நேரங்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஈப்போவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. படம்: மாதங்கி இளங்கோவன் -

போதைப் பொருள் கடத்தியதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மலேசியர் நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் நல்லுடல் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) அன்று ஈப்போவின் பந்தோங்கில் அடக்கம் செய்யப்படும்.

அவரது சகோதரி சர்மிளா தர்மலிங்கம் புதன்கிழமை (ஏப்ரல் 27) அன்று கூறியதாக மலேசியாவின் தி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்தது.

தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள அவர்களது இல்லத்தில் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர், பிற்பகல் அளவில் நாகேந்திரனின் நல்லுடல் அடக்கம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாகேந்திரனின் நல்லுடல் நள்ளிரவுக்குப் பின்னர் அவரது இல்லத்தை அடைந்தது.

சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு விமானம் வழியாகவும் அங்கிருந்து ஈப்போவுக்கு வாகனம் வழியாகவும் அவரது நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது.