மாப்பிள்ளை இல்லாத திருமணம்

மாப்பிள்ளை இல்லாத திருமணம்

1 mins read
ddf0ca4b-c25d-47ea-912c-5db9df0fce36
-

விருந்தினர்கள் அழைக்கப்படாத திருமணம், மொய் காசு இல்லாத கல்யாணம், தாலி, மோதிரம் மாற்றிக்கொள்ளாத திருமணச் சடங்குகள் என பலதரப்பட்ட வித்தியாசமான திருமணங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் மாப்பிள்ளை இல்லாத ஒரு வினோத கல்யாணம் சீனாவில் அண்மையில் நடைபெற்றது.

மாப்பிள்ளை போன்று கம்பீரமாக உடை அணிந்த ஒரு வாலிபர் சாலையோரம் கைதொலைபேசியில் ஒரு திருமணத்தின் நேரடி காட்சிகளைப் பார்த்துகொண்டிருக்கிறார். ஏதோ திருமணம் அல்ல; அவர் மாப்பிள்ளையாகக் கலந்துகொள்ளவேண்டிய திருமணம். கொவிட்-19 தொற்றினால் வந்த கொடுமை இது.

தம்முடைய திருமணத்தில் கலந்துகொள்ள பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று மாப்பிள்ளைக்கு ஒரு நாள் முன்பு தான் தெரியவந்தது. உடனடியாகச் சோதனையைச் செய்துகொண்டார். எதிர்பாராதவிதமாக, பரிசோதனை முடிவு கிடைக்க தாமதம் ஏற்பட்டது. இதனால், சொந்த கல்யாணத்துக்குச் செல்ல திருமண மண்டபம் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. திருமணச் சடங்குகள் மாப்பிள்ளை இல்லாமல் நடந்தேறின.

இது பற்றி கொஞ்சம்கூட மனவருத்தம் இல்லாத மாப்பிள்ளை தமது கல்யாணத்தைக் கைதொலைபேசியில் கண்டு மகிழ்ந்தார்.

ஒரு வழியாக சோதனை முடிவு கைக்குக் கிடைத்தது. மாப்பிள்ளைக்குத் தொற்று இல்லை என்று உறுதியானதும் அவர் உடனே கல்யாண மண்டபத்துக்கு விரைந்தார். மணமக்கள் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தனர்.

மூடநம்பிக்கை, பிற்போக்கான சிந்தனைகள், வரதட்சணை போன்றவற்றால் பல திருமணங்கள் கடைசி நேரத்தில் நடக்காமல் போகின்றன. ஆனால் மாப்பிள்ளை இல்லாவிட்டாலும், திருமணம் ஆனந்தமாக நடைபெற்று, தம்பதி தங்கள் வாழ்க்கையை இனிதே தொடங்கியுள்ளனர்.