'சுவீடனும் பின்லாந்தும் விரைவில் நேட்டோவில் இணையலாம்'

'சுவீடனும் பின்லாந்தும் விரைவில் நேட்டோவில் இணையலாம்'

1 mins read
e0e3dbac-9d99-4e3d-9501-b0edb5f2142b
-

பிர­சல்ஸ்: மேற்­கத்­திய நாடு­க­ளின் ராணு­வக் கூட்­ட­ணி­யான 'நேட்டோ'வில் பின்­லாந்­தும் சுவீ­ட­னும் விரை­வில் உறுப்­பி­ன­ராக முடி­யும் என்று அவ்­வ­மைப்­பின் தலை­மைச் செய­லா­ளர் ஜென்ஸ் ஸ்டோல்­டன்­பர்க் தெரி­வித்­துள்­ளார்.

"நேட்­டோ­வில் உறுப்­பி­ன­ரா­கச் சேர முடி­வெ­டுத்­தால், பின்­லாந்­தை­யும் சுவீ­ட­னை­யும் மகிழ்ச்­சி­யோடு வர­வேற்­போம். அதற்­கான செயல்­முறை விரை­வில் இடம்­பெ­றும் என எதிர்­பார்க்­கி­றேன்," என்று பிர­சல்ஸ் நக­ரில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது திரு ஸ்டோல்­டன்­பர்க் கூறி­னார்.

இதன் தொடர்­பில் பின்­லாந்து அதி­ப­ரு­டன் பேச­வி­ருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

அவ்­விரு நாடு­களும் விண்­ணப்­பம் செய்­வ­தற்­கும் நேட்­டோ­வில் இப்­போது உறுப்­பி­ன­ராக உள்ள 30 நாடு­களும் ஒப்­பு­தல் அளிப்­ப­தற்­கும் இடைப்­பட்ட காலத்­திற்­கான உரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்ய முடி­யும் என்­றும் அவர் உறு­தி­கூ­றி­னார்.

முன்­ன­தாக, பின்­லாந்­தும் சுவீ­ட­னும் 'நேட்டோ'வில் இணைய முடி­வெ­டுத்­தால் எல்­லைப் பகு­தி­யில் அணு­வா­யு­தங்­க­ளை­யும் அதி­ந­வீன ஏவு­க­ணை­க­ளை­யும் நிறுத்­தி­வைப்­போம் என்று ரஷ்யா எச்­ச­ரிக்கை விடுத்திருந்தது.

ரஷ்­யா­வும் பின்­லாந்­தும் 1,300 கிலோ­மீட்­டர் நீளத்­திற்கு நில எல்­லை­யைப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளன.