சீனாவில் பல மில்லியன் பேருக்குப் பரிசோதனை

சீனாவில் பல மில்லியன் பேருக்குப் பரிசோதனை

1 mins read
fcce5569-0a5e-4204-80bd-5f5838361220
-

பெய்­ஜிங்: சீனாவின் குவாங்சோ நகரில் ஒரு­வரை கொவிட்-19 தொற்­றி­யி­ருக்­க­லாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வதை அடுத்து, அந்­ந­க­ரைச் சேர்ந்த 5.6 மில்­லி­யன் பேர் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­ உள்­ள­னர். அங்கு நூற்­றுக்­க­ணக்­கான விமான சேவை­களும் ரத்­து­செய்­யப்­பட்­டன.

கடந்த 2019 டிசம்­பர் மாதத்தில் முதன்­மு­த­லா­கச் சீனா­வில்­தான் கொவிட்-19 தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது. அதன்­பி­றகு அங்கு கொரோனா பர­வல் வெகு­வா­கக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்­நி­லை­யில், மீண்­டும் அங்கு கொரோனா பெருந்­தொற்று தலை­வி­ரித்­தா­டத் தொடங்­கி­யுள்­ளது.

ஷங்­ஹாய் நக­ரில் நாள்­தோ­றும் கொரோ­னா­வால் ஈரி­லக்க உயி­ரி­ழப்பு பதி­வாகி வரு­கிறது. அதே­போல், தலை­ந­கர் பெய்­ஜிங்­கி­லும் குறிப்­பி­டத்­தக்க அள­வில் கிருமித் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளதால் அக்­கம்­பக்க வட்­டா­ரங்­கள் முழு­வது­மாக முடக்­கப்­பட்­டுள்­ளன.

கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்­கும் கொள்­கை­யு­டன் இருக்­கும் சீனா, பொது முடக்­கம், பேர­ள­வில் பரி­சோ­தனை, பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் போன்ற வழி­க­ளைக் கையாண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், சீனா­வின் தென்­பகு­தி­யில் அமைந்­துள்ள முக்­கிய வணிக, உற்­பத்தி மைய­மான குவாங்சோ நக­ரில் கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்கு மக்­கள் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அங்­குள்ள விமான நிலை­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட கொவிட்-19 பரி­சோ­த­னை­களில் ஒன்­றில் 'இயல்­புக்கு மாறான' முடிவு வந்­ததை அடுத்து, அங்கு பெரும்­பா­லான விமான சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

இத­னி­டையே, தொழில்­நுட்ப மைய­மான ஹாங்சோ நக­ரைச் சேர்ந்த 9.4 மி. மக்­கள் 48 மணி நேரத்­திற்கு ஒரு­முறை பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.