லிவர்பூல்: எதிரணியின் சொந்த கோலாலும் சாடியோ மானே போட்ட கோலாலும் லிவர்பூல் காற்பந்துக் குழு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது. ஆன்ஃபீல்ட் அரங்கில் நேற்று அதிகாலை நடந்த அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினின் வில்லா ரியால் குழுவை வீழ்த்தியது. முற்பாதி ஆட்டத்தின்போது வில்லாரியால் குழுவினரின் வலிமையான தற்காப்பால் லிவர்பூல் வீரர்கள் கோலடிக்க முடியாமல் திணறினர். தியாகோ அல்கேன்டரா உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி எட்டாம் நிமிடத்தில் லிவர்பூல் தலைவர் ஜோர்டன் ஹெண்டர்சன் உதைத்த பந்து, எதிரணி வீரரின் காலில் பட்டு வலைக்குள் புகுந்தது. அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே கோலடித்து முன்னிலையை இரட்டிப்பாக்கினார் மானே. லிவர்பூல்-வில்லாரியால் இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மே 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இறுதிச் சுற்றை நெருங்கும் லிவர்பூல்
1 mins read
-

