செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
01b4e506-f67d-43e3-bc4f-6dfbc7093dad
-

சிகரெட்டால் நேர்ந்த விமான விபத்து

பாரிஸ்: கடந்த 2016ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவிற்குச் சென்ற எகிப்துஏர் விமானம் எம்எஸ்804 விபத்திற்குள்ளானதில் அதிலிருந்த 66 பயணிகளும் விமான ஊழியர்களும் மாண்டு போயினர். பயங்கரவாதத் தாக்குதலே அதற்குக் காரணம் என்று எகிப்திய அதிகாரிகள் முதலில் கூறிய நிலையில், விமானி சிகரெட் பிடித்ததால் அவ்விபத்து நேர்ந்ததாக இப்போது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2016 மே 19ஆம் தேதி மத்தியத் தரைக்கடலுக்கு மேலே பறந்தபோது அவ்விமானம் காணாமல் போனது. ஒரு மாதத்திற்குப் பிறகு அதன் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.

ஸ்பெயினுக்கு அல்ஜீரியா மிரட்டல்

மட்ரிட்: ஸ்பெயினுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா மிரட்டல் விடுத்துள்ளது. அல்ஜீரியாவில் இருந்து மொரோக்கோ வழியாக ஸ்பெயினுக்கு எரிபொருளைக் கொண்டுசெல்லும் மக்ரேப்-ஐரோப்பிய எரிவாயுக் குழாய் வழியாக மொரோக்கோ நாட்டிற்கு எரிவாயுவை அனுப்பவிருப்பதாக ஸ்பானிய எரிசக்தி அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அல்ஜீரிய எரிசக்தி அமைச்சு, ஸ்பெயினுடனான எரிவாயு விநியோக ஒப்பந்தங்களை ரத்து செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது. மேற்கு சகாரா பகுதி தொடர்பிலான பிரச்சினை காரணமாக மொரோக்கோ உடனான அரசதந்திர உறவுகளை அல்ஜீரியா கடந்த ஆண்டு துண்டித்துக்கொண்டது.

தைவானில் இரட்டிப்பான தொற்று

தைவான்: பொருளியலைப் பாதிக்கக்கூடும் என்பதால் பரவலான கட்டுப்பாடுகளை விதிப்பதைத் தைவான் அரசு தவிர்த்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக அங்கு கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று 5,108ஆகப் பதிவான ஒருநாள் பாதிப்பு, நேற்று புதிதாக 11,353 பேருக்குத் தொற்று உறுதியானது.