கியவ்மீது ர‌ஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்

கியவ்மீது ர‌ஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்

1 mins read
b047e535-2de7-45cc-82f2-e1d8101bd03f
உக்ரேனின் கியவ்வில் உள்ள அர்­டி­யோம் ஏவு­கணை, விண்­வெளி நிறு­வ­னங்­க­ளின் உற்­பத்திப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். படம்: நியூயார்க் டைம்ஸ் -

ஐநா தலைமைச் செயலாளர் உக்ரேனிய அதிபருடன் சந்திப்பு

கியவ்: ஐநா தலைமைச் செ­ய­லா­ளர் அண்டோனியோ குட்­ட­ரெஸ் உக்­ரேன் தலை­ந­கர் கியவ் சென்­றுள்ள நிலை­யில், அந்­ந­கர் மீது ரஷ்­யப் படை­கள் ஏவு­கணை தாக்­கு­தல் நிகழ்த்­தின. இதனை ர‌ஷ்­யத் தற்­காப்பு அமைச்சு உறுதி செய்­தது.

ர‌ஷ்யா ராணு­வத்­தின் மிகத் துல்லி­ய­மான, நீண்ட தூரம் சென்று தாக்­கக்­கூ­டிய ஏவு­கணை, உக்­ரே­னின் கியவ்­வில் உள்ள அர்­டி­யோம் ஏவு­கணை, விண்­வெளி நிறு­வ­னங்­க­ளின் உற்­பத்தி கட்­ட­டங்­களைத் தாக்கி அழித்­த­தாக ர‌ஷ்யா தெரி­வித்­தது.

ஐநா தலைமைச் செய­லா­ளர் குட்­ட­ரெஸ், உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்­கி­யு­டன் பேச்­சு­வார்த்­தையை முடித்­து­விட்டு திரும்­பிய சில மணி நேரங்­களில் இந்த குண்டு­வெ­டிப்பு நிகழ்ந்­தது.

25 மாடி குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்றை ஏவு­க­ணை தாக்­கி­ய­தில் 10 பேர் காய­ம­டைந்­த­னர்.

சில வாரங்­க­ளுக்கு முன், கியவ்­விற்கு வெளியே உள்ள படை­களைத் திரும்ப பெற்­றுக் கொண்­டி­ருந்த ர‌ஷ்யா, கியவ்­வில் மீண்­டும் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளது.

இத்­தாக்­கு­தல் பற்றி பேசிய ஸெலன்ஸ்கி, "எப்­போ­தும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும் என்­பதை இத்­தாக்­கு­தல் காட்­டு­கிறது. போர் முடிந்­து­விட்­ட­தாக எண்­ணி­வி­டக்­கூ­டாது," என்­றார்.

ஐநாவை அவ­ம­திக்­கும் நோக்­கில் ரஷ்யா இந்த தாக்­கு­தலை நிகழ்த்தி உள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார். ர‌ஷ்­யா­வின் இத்­தாக்­கு­தல் தனக்கு அதிர்ச்சி அளிப்­ப­தாக சொன்­னார் குட்­ட­ரெஸ்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்­கி­டையே, மரி­ய­போல் அசோவ்ஸ்­டால் எஃகு ஆலை­யில் சிக்­கி­யுள்ள உக்­ரேன் வீரர்­கள், மக்­களை மீட்­ப­தற்கு கியவ் திட்­ட­மிட்டு உள்­ளது.