இஸ்லாமாபாத்: கடைக்காரரை யும் அவரது உதவியாளரையும் கட்டி வைத்து, அடித்து உதைத்து மிரட்டி, தையல்கடையில் இருந்த
200 ஆடைகளைக் கொள்ளையடித்துச் சென்றவனை இஸ்லாமாபாத் காவல்முறையினர் தேடி வருகின்றனர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு தாம் தைத்து வைத்திருந்த வாடிக்கையாளர்களின் பாரம்பரிய பாகிஸ்தானிய உடைகளை, ஆயுதமேந்தி வந்த இரண்டு பேர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக தையல்கடையின் உரிமையாளரான முகமது ரசாக் வருத்தத்துடன் சொன்னார்.
பண்டிகை நேரத்தில் வாடிக்கையாளர்கள் கொடுத்த துணிகள் எல்லாம் விலை உயர்ந்தவை என்ற அவர், அவற்றின் மதிப்பு, ஏறத்தாழ 720,000 பாகிஸ்தான் ரூபாய் (5,350 வெள்ளி) என்றும் சொன்னார்.

