தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 12 பெண்கள் மரணம்

தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 12 பெண்கள் மரணம்

1 mins read
58b6f156-1c70-4c8e-aa61-091dd9e7a174
-

மேடான்: இந்­தோ­னீ­சி­யா­வில் சட்­ட­வி­ரோ­த­மாக செயல்­பட்டு வந்த தங்­கச் சுரங்­கத்­தில் ஏற்­பட்ட நிலச்­சரி­வில் சிக்கி 12 பெண்­கள் மர­ண­ம­டைந்­த­னர்.

இந்த விபத்­தில் மாண்ட பெண்­கள் 30 முதல் 55 வய­து­டை­ய­வர்­கள். வடக்கு சுமத்­ரா­வில் உள்ள அந்த சுரங்­கத்­திற்கு அரு­கில் இருந்த குன்று ஒன்று சரிந்­த­தில் இரண்டு மீட்டர் ஆழ சேற்றில் சிக்கிய பெண்கள் மாண்டுவிட்டனர். நிலச்­ச­ரி­வில் சிக்­கா­மல் தப்­பிய இரண்டு பெண்­கள், கிராம அதி­கா­ரி­க­ளி­டம் இச்சம்­ப­வத்­தைக் கூறி­னார்­கள்.