இஸ்ரேலின் ஜெருசலம் நகரிலுள்ள அல்-அக்ஸா பள்ளி வாசல் வளாகத்தில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் குறைந்தது 42 பேர் காயமடைந்தனர். யூதா்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினருமே புனிதமாகக் கருதும் இந்த வளாகத்தில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
அல்-அக்ஸாவிற்கு கீழே உள்ள யூதர்களின் புனித தளமான மேற்கு சுவரை நோக்கி நூற்றுக்கணக்கானவர்கள் கற்கள், வானவேடிக்கைகளை எறிந்ததைத் தொடர்ந்து, அவர்களைக் கலைக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தினர். பள்ளிவாசல் வளாகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பாலஸ்தீன ஆடவரைப் பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர். படம்: ஏஎஃப்பி

