கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் பெய்ஜிங்

கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் பெய்ஜிங்

1 mins read
b6c2a4be-40f0-4c46-bc80-83c714be8ccc
-

பெய்­ஜிங்: பெய்­ஜிங்­கில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து வரு­கிறது. இத­னால் நீண்ட வார இறு­தி­யில் பெரும்­பா­லான மக்­கள் வெளி­யி­டங்­க­ளுக்­குச் செல்­ல­மு­டி­யா­மல் வீட்­டி­லேயே முடங்­கிக் கிடக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கட்­டுப்­பா­டு­கள், தொடர் பரி­சோ­த­னை­கள் என மக்­கள் விரக்தி அடைந்­தி­ருந்­தா­லும், இந்த நீண்ட வார இறு­திக்­குப் பிறகு பெய்­ஜிங் கட்­டுப்­பா­டு­களை மேலும் கடு­மை­யாக்­கு­கிறது.

வரும் 5ஆம் தேதி முதல் பொது இடங்­க­ளுக்­கும் பொதுப் போக்­கு­வரத்­தி­லும் செல்­வ­தற்கு, முந்­திய ஒரு வாரத்­திற்­குள் எடுக்­கப்­பட்ட கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் பரி­சோ­தனை சான்­றி­தழ் அவ­சி­ய­மா­கிறது.

விளை­யாட்டு நிகழ்ச்­சி­கள், குழு­வாக பய­ணம் செய்­வது போன்­ற­வற்­றில் கலந்­து­கொள்­வோர் முந்­திய 48 மணி நேரத்­திற்­குள் தொற்று இல்லை என்­பதை பரி­சோ­தனை மூலம் உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும்.

அத்­து­டன் அவர்­கள் முழு­மை­யாக தடுப்­பூ­சி போட்­டுக்­கொண்­ட­வர்­களா­க­வும் இருக்­க­வேண்­டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனா­வில் நேற்று 10,700 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டன. அவற்­றில் பெரும்­பா­லா­னவை ‌ஷாங்­கா­யில் பதி­வா­னவை. பெய்­ஜிங்­கில் 54 பேரைக் கிருமி தொற்­றி­யது.

‌ஷாங்­கா­யில் தற்­போது கண்­ட­றி­யப்­படும் சம்­ப­வங்­கள் தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­க­ளோடு தொடர்­பு­டை­யவை என்­ப­தால், அங்கு சமூ­கப் பர­வல் குறைந்து வரு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பல குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் முடக்­க­நிலை தளர்த்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் கிட்­டத்­தட்ட 1,000 நிறு­வ­னங்­கள் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ள­தா­க­வும் ‌ஷாங்­காய் நிர்­வா­கம் கூறி­யது.