உலகளவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை, விலை உயர்வு

உலகளவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை, விலை உயர்வு

1 mins read
2098e18d-6dd3-40aa-accd-54581fe8f017
-

பாரிஸ்: பாமா­யில் எனும் செம்­பனை எண்­ணெய் ஏற்­று­ம­தி­யைத் தடை செய்ய இந்­தோ­னீ­சியா எடுத்த முடி­வால், உல­க­ள­வில் வெவ்­வேறு வித­மான காய்­கறி எண்­ணெய்­க­ளின் விலை­யும் அதி­க­ரித்­துள்ளது.

இந்­தோ­னீ­சி­யா­வில் உள்­நாட்­டில் நில­வும் பாமா­யில் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்­வ­தற்­காக, ஏற்­று­மதியைத் தடை செய்­வ­தாக சென்ற வாரம் அறி­விக்கப்பட்டது.

தென் அமெ­ரிக்­கா­வில் நில­வும் வறட்சி கார­ண­மாக ஏற்­கெ­னவே சோயா எண்­ணெய் உற்­பத்தி பெரு­ம­ளவு குறைந்­து­விட்­டது. வறட்சி கார­ண­மாக கன­டா­வின் ரேப்­சீட் எண்­ணெய் உற்­பத்தி 50 விழுக்­காடு சரிவு கண்­டுள்­ளது.

உக்­ரேன்-ர‌ஷ்யா போரால் ‌சூரி­ய­காந்தி எண்­ணெய்­யும் சந்­தை­களில் குறைந்­து­விட்­டது.

எனவே, பெட்­ரோல் உள்­ளிட்ட பிற தேவைக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் தாவர எண்­ணெ­ய்யில், 15 விழுக் காட்டைச் சமை­யல் எண்­ணெய் பயன்­பாட்­டுக்கு ஐரோப்­பிய நாடு­கள் திருப்பிவிட்­டுள்­ளன. ஜெர்­மனி, பிரிட்­டன், துருக்கி ஆகிய நாடு­களில் சமை­யல் எண்­ணெய் விற்­ப­னைக்குக் கட்­டுப்­பாடு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.