பாரிஸ்: பாமாயில் எனும் செம்பனை எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தோனீசியா எடுத்த முடிவால், உலகளவில் வெவ்வேறு விதமான காய்கறி எண்ணெய்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்தோனீசியாவில் உள்நாட்டில் நிலவும் பாமாயில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, ஏற்றுமதியைத் தடை செய்வதாக சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது.
தென் அமெரிக்காவில் நிலவும் வறட்சி காரணமாக ஏற்கெனவே சோயா எண்ணெய் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. வறட்சி காரணமாக கனடாவின் ரேப்சீட் எண்ணெய் உற்பத்தி 50 விழுக்காடு சரிவு கண்டுள்ளது.
உக்ரேன்-ரஷ்யா போரால் சூரியகாந்தி எண்ணெய்யும் சந்தைகளில் குறைந்துவிட்டது.
எனவே, பெட்ரோல் உள்ளிட்ட பிற தேவைக்காக பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய்யில், 15 விழுக் காட்டைச் சமையல் எண்ணெய் பயன்பாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் திருப்பிவிட்டுள்ளன. ஜெர்மனி, பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளில் சமையல் எண்ணெய் விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

