மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது ர‌ஷ்யா

மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது ர‌ஷ்யா

2 mins read
2e1af546-98e8-4e9b-8088-31658ff14804
-

கார்­கிவ்: ர‌ஷ்­யப் படை­கள் உக்­ரே­னின் கார்­கிவ் நக­ரி­லும் தனது தாக்­கு­தலை மீண்­டும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

முந்­திய நாள் கியவ் நக­ரின் ஏவு­கணை உற்­பத்­திக் கட்­ட­டத்­தின்­மீது ர‌ஷ்யா ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்­தி­யது.

கார்­கிவ் நகரை உக்­ரேன் மீண்­டும் தனது கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வந்­தி­ருந்­தா­லும், ர‌ஷ்­யப் படை­கள் அங்­கு தொடர்ந்து தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

ர‌ஷ்­யா­வின் இத்­த­தாக்­கு­த­லில் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­தாக கார்­கிவ் வட்­டார ராணுவ நிர்­வா­கம் சொன்­னது.

கிழக்கு உக்ரேனில் உள்ள சொலோவியோ என்ற கிராமத்தில் ர‌ஷ்யப் படைகள், தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதாக அதன் ராணுவ தலைவர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.

"கார்­கிவ், டோன்­பாஸ் நக­ரங்­களில் மிக­வும் கடி­ன­மான சூழல் நில­வு­கிறது.

"ஆனால் கார்­கிவ்­வில் எங்­கள் ராணுவ, உள­வுப் படை­யி­னர் வெற்றி ­க­ளைப் பெற்­றுள்­ள­னர்," என்­று உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி சொன்னார்.

கார்­கிவ்­விற்கு அரு­கில் உள்ள முக்­கிய கிரா­மத்தை மீண்­டும் கைப்­பற்­றி­ய­தாக உக்­ரேன் படை­கள் கூறின.

ஒரே இர­வில் 389 உக்­ரே­னிய இலக்­கு­கள் தாக்கி அழிக்­கப்­பட்­ட­தாக ர‌ஷ்யா தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, ர‌ஷ்­யா­மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடை­களை நீக்­கு­வது ர‌ஷ்யா-உக்­ரேன் அமை­திப் பேச்­சு­வார்த்­தை­யின் ஒரு பகுதி யாகும் என்று சீன ஊட­கம் ஒன்­றிற்கு அளித்­தப் பேட்­டி­யில் ர‌ஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் செர்ஜி லாவ்­ரோவ் சொன்­னார்.

ஒப்பந்தம் தொடர்பாக ர‌‌ஷ்ய, உக்ரேன் அதிகாரிகள் காணொளி வாயிலாக தினமும் சந்தித்து பேசுவதாகவும் அவர் தெரிவித் தார்.

அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்வது கடினமானது என்றாலும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ர‌ஷ்யா தயாராக உள்ளதாகவும் லாவ்ரோவ் சொன்னார்.

ஆனால், ர‌ஷ்யா மீதான தடை­கள் அமை­திப் பேச்­சு­வார்த்­தை­யின் ஒரு பகு­தி­யாக இருக்­கக்­கூ­டாது என்று ஸெலன்ஸ்கி தொடர்ந்து வலி­யுறுத்தி வரு­கி­றார்.

இதற்கிடையே, ர‌ஷ்­யப் படை­கள், தங்கள் கைப்பற்றிய உக்ரேனியப் பகுதிகளில் இ­ருந்த பல மில்­லி­யன் டன் தானி­யங்­க­ளைத் திருடிவிட்­ட­தாக உக்­ரே­னின் துணை விவ­சாய அமைச்­சர் சொன்­னார்.