பெருநாள் கொண்டாட்டம்: சொந்த ஊருக்குத் திரும்பும் மக்கள்

பெருநாள் கொண்டாட்டம்: சொந்த ஊருக்குத் திரும்பும் மக்கள்

2 mins read
8a25cc6d-2d6c-475a-84dd-6f82aced8e04
நோன்புப் பெருநாளுக்காக சொந்த ஊர் செல்வதற்கு வாகனமோட்டிகள் இந்தோனீசியாவின் நெக்ரெக் பகுதியைக் கடந்து செல்லும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் மில்லியன்கணக்கானோர் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலா­லம்­பூர்: கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் இல்­லாத நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டம் மலே­சி­யா­வி­லும் இந்­தோ­னீ­சி­யா­வி­லும் களை­கட்­டி­யுள்­ளது.

இரண்டு ஆண்­டு­களில் முதல்­மு­றை­யாக நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டத்­திற்­காக இரு­நா­டு­க­ளி­லும் பெரு­ம­ள­வி­லான மக்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பத் தொடங்­கி­யுள்­ள­னர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களும் எல்லை கடந்து பய­ணம் செய்­ய­லாம், வீடு­களில் ஒன்­று­கூ­டு­வோ­ருக்­கான எண்­ணிக்கை கட்­டுப்­பாடு கிடை­யாது என்­பது போன்ற தளர்­வு­களை மலே­சியா சென்ற வாரம் அறி­வித்­தது.

இத­னை­ய­டுத்து, பண்­டிகை நேரத்­தில் மலே­சி­யா­வின் முக்­கிய சாலை­கள், நெடுஞ்­சா­லை­களில் வாகன நெரி­சல் ஏற்­பட்­டுள்­ளது.

வடக்கு-தெற்கு நெடுஞ்­சா­லை­யில் பல வழித்­த­டங்­களில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் காணப்­பட்­ட­தாக மலே­சிய நெடுஞ்­சாலை ஆணை­யம் தெரி­வித்­தது.

கிட்­டத்­தட்ட இரண்டு மில்­லி­யன் வாக­னங்­கள் நெடுஞ்­சா­லை­க­ளைக் கடக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எனவே, கூடு­தல் பயண நேரத்­திற்­குத் திட்­ட­மிட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­ளப் பட்­டுள்­ளது.

சந்­தை­களில் குவிந்த மக்­கள்

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் மழை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் நோன்­புப் பெரு­நா­ளுக்­கான சந்­தை­களில் பொருட்­களை வாங்­கு­வ­தில் மக்­கள் மும்­மு­ரம் காட்­டு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், பண்­டிகை நேரத்­தில் விநி­யோ­கப் பற்­றாக்­கு­றை­யைத் தவிர்க்­கும் நோக்­கில் அத்­தி­யா­வ­சிய உண­வுப் பொருள்­க­ளைத் தேவைக்கு அதி­க­மாக வாங்க வேண்­டாம் என்று மலே­சிய அர­சாங்­கம் பொது மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

"நோன்­புப் பெரு­நா­ளுக்­காக பிள்­ளை­கள் வீட்­டில் இருப்­ப­தால், ஒரு மாதத்­திற்­குத் தேவை­யான கோழியை வாங்­கா­தீர்­கள். நோன்புப் பெரு­நா­ளுக்­குத் தேவை­யா­னதை மட்­டும் வாங்­குங்­கள்," என்­றார் விவ­சாய, உண­வுத் துறை அமைச்­சர். இருப்­பி­னும், சில பகு­தி­களில் கோழி­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­படு­வ­தற்­கான வாய்ப்­புள்­ளதை அவர் மறுக்­க­வில்லை.

இந்­தோ­னீ­சி­யா­வில் 20 மில்­லி­யன் பேர் பய­ணம்

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு உள்ள­தால் இந்­தோ­னீ­சி­யா­வில், பெரு­நாள் கொண்­டாட்­டத்­திற்­காக கிட்­டத்­தட்ட 20 மில்­லி­யன் பேர் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அங்கு பேருந்­து­கள், ரயில்­கள், கடல் போக்­கு­வ­ரத்து என அனைத்­தி­லும் மக்­கள் கூட்­டம் நிரம்பி வழி­கிறது. 3வது தடுப்­பூ­சி போட்­டுக் கொண்­ட­வர்­கள் பய­ணத்­திற்­கான பரி­சோ­தனை செய்யவேண்டிய தேவை­யில்லை என்று இந்­தோ­னீ­சியா அறி­வித்­துள்­ளது.