தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானச் சேவையைத் தொடங்கும் குவான்டஸ்

1 mins read
526d9fd7-0087-4adc-b8ba-6e8ede557252
புதிய சேவையை வழங்க 12 A350-1000ரக விமானங்களை குவான்டஸ் நிறுவனம் வாங்கியுள்ளது (படம்: ஏஃபி) -

சிட்னியிலிருந்து லண்டனுக்கு 19 மணி நேரம் இடைநில்லா விமானச் சேவையை குவான்டஸ் நிறுவனம் தொடங்கவுள்ளது. இதன் மூலம் உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானப் பயணத்தை குவான்டஸ் மேற்கொள்ளும். இந்தச் சேவை 2025ஆம் ஆண்டு தொடங்கும்.

ஐந்து ஆண்டுகள் திட்டமிடுதலுக்குப் பிறகு 12 அதிநவீன A350-1000ரக விமானங்களை நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் வழி, லண்டன் நியூயார்க் ஆகிய இரண்டு நகரங்களுக்கு குவான்டஸ் நேரடி சேவையை வழங்கமுடியும்.

இந்த விமானங்களில் 238 பயணிகள் பயணம் செய்யமுடியும். முதல் பிரிவில் படுக்கைகள், சாயும் நற்காலி, அலமாரி போன்ற வசதிகள் இருக்கும். எகானமி பிரிவில் பயணிகள் வசதியாக நடமாட கூடுதல் இடம் இருக்கும் எனக் கூறப்பட்டது.

தற்போது உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானச் சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்குகிறது. சிங்கப்பூர்- நியூயார்க் இடையிலான 19 மணி பயணச் சேவையை அது அளிக்கிறது.