இலங்கையில் மருந்து விலை 40 விழுக்காடு அதிகரிப்பு

இலங்கையில் மருந்து விலை 40 விழுக்காடு அதிகரிப்பு

1 mins read
545fb1ea-14ec-4142-9c6a-33244fc441e5
படங்கள்: ஏஃபி -
multi-img1 of 3

இலங்கையில் சில பொது மருந்துகளின் விலை 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு மருந்து, வலி நிவாரண மாத்திரை, இதய நோய்களுக்கான மருந்து ஆகியவற்றின் விலை ஆறு வாரங்களில் இரு முறை உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நோயளிகள் மருந்துகளைக் குறுகிய காலத்துக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள முடிகிறது. வேறு சிலர் வெளிநாடுகளிலிருந்து மருந்துகள் வாங்க முயன்றுவருகின்றனர்.

பொதுவாக நோய் எதிர்ப்பு மருந்தைத் தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு எடுக்கவேண்டும். ஆனால் விலை உயர்வால், பலர் இரண்டு மூன்று நாள்களுக்கு மட்டுமே மருந்து வாங்குகின்றனர். இப்படி என்றால் எப்படி நோயாளிகள் குணமடைவர் என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிக விலை கொடுத்து மருந்து வாங்க எண்ணினாலும், பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவிலிருந்து மருந்து வரவழைக்க பலர் முயன்றுவருகின்றனர். மருந்துகளின் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில் இலங்கைக்கு மருந்துகள் அளிக்க இந்திய முன்வந்துள்ளது. ஆனால் அதில் பல இடையூறுகள் இருப்பதால், மருந்துகள் இலங்கையைச் சென்றடைய வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்பட்டது. ஏற்கனவே பால் மாவு, எரிப்பொருள், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளன.