தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரேசில், அர்ஜெண்டினா மீண்டும் மோதல்

1 mins read
73a397e2-f643-48eb-aee5-657ab25c41c7
-

பாரிஸ்: பிரேசில், அர்ஜெண்டினா காற்பந்துக் குழுக்கள் மோதும் உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்டம் மீண்டும் நடத்தப்படும் என்று ஃபிஃபா அறிவித்துள்ளது.

இரு நாடுகளும் ஏற்கெனவே உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், அவர்களின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

ஏற்கெனவே செப்டம்பர் 5ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மோதலில் ஈடுபட்டன. அப்போது. அர்ஜெண்டினா அணியில் இருந்த நால்வர் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை மீறியதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரேசில் தரப்பில் கூறப்பட்டது.