பாதுகாப்புக்காகத் தஞ்சம்

கொழும்பு: பதவி வில­கிய இலங்­கைப் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே, 76, தமது குடும்­பத்­து­டன் தலை­

ம­றை­வா­கி­விட்­ட­தா­கச் செய்­தி­கள் வெளி­வந்து உள்­ளன. அவ­ரது வீட்­டை­யும் ஆளுங்­கட்­சித் தலை­வர்­க­ளின் வீட்­டை­யும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் தீ வைத்து எரித்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து குரு­னே­கலா என்­னும் இடத்­தி­லுள்ள தமது வீட்­டி­லி­ருந்து ராஜ­பக்சே வெளி­யேறி­ விட்­ட­தா­க­வும் ஆனால் அவர் எங்கே சென்­றார் என்ற தக­வல் இல்லை என்­றும் கூறப்­பட்­டது.

அவ­ரது இருப்­பி­டத்தை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் தேடி வந்த நிலை­யில், அவர் வட­கி­ழக்கு இலங்கை நக­ரான திரு­கோ­ண­ம­லை­யிலுள்ள கடற்­ப­டைத் தளத்­தில் பதுங்கியிருப்­ ப­தாகத் தகவல் வெளியானது.

அத­னைக் கேள்­விப்­பட்­ட­தும் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் கடற்­

ப­டைத் தளத்­துக்கு வெளியே திரண்டு அர­சாங்க எதிர்ப்பு முழக்­கங்­களை எழுப்பி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தாக டெய்லி மிரர் கூறியது.

ராஜ­பக்­சே­வும் அவ­ரது குடும்­பத்­தி­னர் மற்­றும் ஆளும் கட்­சித் தலை­வர்­கள் நாட்­டை­விட்டு தப்­பிச்­சென்­று­வி­டா­த­வாறு கொழும்பு அனைத்­து­லக விமான நிலை­யம் செல்­லும் வழி­யெங்­கும் ஏரா­ள­மான எதிர்ப்­பா­ளர்­கள் தீவி­ரக் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

பதவி வில­கிய 9ஆம் தேதி இரவே ராஜ­பக்சே கொழும்பு நக­ரில் இருந்து திரு­கோ­ண­ம­லைக்கு ஹெலி­காப்­டர் மூலம் தப்­பிச்­சென்­ற­தா­க­வும் அதற்கு ராணு­வம் உத­வி­ய­தா­க­வும் தக­வல்­கள் கூறின. தப்­பிச் செல்­வ­தற்­கான உத­வி­க­ளைச் செய்ய ராணு­வத்­துக்கு அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே அனு­மதி அளித்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

பாது­காப்­புக்­காக அவர் கடற்

­ப­டைத்தளத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­தாக தற்­காப்பு அமைச்­சின் செய­லர் கமல் குண­ரத்னே தெரி­வித்­துள்­ளார். "நிலைமை சீரா­ன­தும் விரும்­பும் இடத்­திற்கு மகிந்த ராஜ­பக்சே அழைத்­துச் செல்­லப்­ப­டு­வார்," என்­றார் அவர்.

மகிந்த ராஜ­பக்­சே­வும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் ஹெலி­காப்­ட­ரில் தப்­பிச் செல்­லும் படங்­கள் சமூக ஊட­கங்­களில் பர­வின. பம்­ப­லப்­பிட்டி காவல்­துறை தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து இரு பெண்­கள் ஹெலி­காப்­ட­ரில் ஏறு­வ­தும் கொழும்பு ஷங்­ரிலா ேஹாட்­ட­லில் இருந்து மற்­றொரு ஹெலி­கா­ப்டர் புறப்­ப­டு­வ­தும் சமூக ஊட­கப் படங்­களில் காணப்பட்டன.

முன்­ன­தாக, பிர­த­ம­ரின் அதி­கா­ர­பூர்வ இல்­ல­மான 'டெம்­பள் ட்ரீஸ்' மாளி­கை­யில் ராஜ­பக்சே இருந்­த­போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் பிர­த­மர் மாளி­கைக்­குள் நுழைய முயன்­ற­னர்.

ராணு­வத்­தி­னர் கண்­ணீர்ப் புகைக் குண்­டு­களை வீசி அவர்­ க­ளைக் கலைத்­த­னர். மக்களின் கொந்தளிப்பையும் ஆர்ப்பாட்டத்தை யும் அடக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்­கை­யில் வர­லாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைத் தாங்க முடி­யா­மல் மக்­கள் போராட்­டடத்­தில் இறங்­கி­னர். கடந்த சில வாரங்­க­ளாக நீடித்த போராட்­டம் இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் தீவி­ர­ம­டைந்­தது.

திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே: உறுதிப்படுத்திய அதிகாரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!