'ரஷ்யா அனைத்துலக ஒழுங்குமுறைக்கு நேரடி அச்சுறுத்தல்'

'ரஷ்யா அனைத்துலக ஒழுங்குமுறைக்கு நேரடி அச்சுறுத்தல்'

1 mins read
6446b4ab-b3eb-4a3c-86af-89aef6c6c272
-

தோக்­கியோ: உக்­ரேன்­மீது போர்­தொ­டுத்­த­தன் மூல­ம் ரஷ்யா அனைத்­து­லக ஒழுங்­கு­மு­றைக்கு நேரடி மிரட்­ட­லாக விளங்­கு­வ­தாக ஐரோப்­பிய ஆணை­யத்­தின் தலை­வர் உர்­சுலா வான் டெர் லேய்ன் சாடி­யுள்­ளார்.

தோக்­கி­யோ­வில் நடை­பெற்ற ஐரோப்­பிய ஒன்­றிய-ஜப்­பா­னிய உச்­ச­நிலை மாநாட்­டில் நேற்று அவர் உரை­யாற்­றி­னார்.

இந்த வரு­டாந்­த­ரக் கூட்­டத்­தில் ஐரோப்­பிய மன்­றத் தலை­வர் சார்ல்ஸ் மைக்­கெல், ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா போன்­றோ­ரு­டன் இரு­த­ரப்பு உயர் அதி­கா­ரி­கள் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

உக்­ரேன் மீது மாஸ்கோ தொடுத்­துள்ள போருக்கு அனைத்­து­ல­கச் சமூ­கம் கண்­ட­னம் தெரி­வித்­து­வ­ரும் வேளை­யில், சீனா­வின் ஆதிக்­கம் குறித்­தும் கவலை எழுந்­துள்­ள­தாக உச்­ச­நிலை மாநாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆசி­யா­வில் ஐரோப்­பிய ஒன்­றி­யம் கூடு­த­லான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட விரும்­பு­வ­தாக ஐரோப்­பி­யத் தலை­வர்­கள் கூறி­னர். ஆசியா தற்போது 'பதற்­றங்­கள் அரங்­கே­றும் மேடை'யாக விளங்­கு­வ­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

பல­த­ரப்பு உலக ஒழுங்­கு­மு­றை­யைத் தற்­காத்து நடக்­கும்­படி சீனா­வுக்கு அவர்­கள் வேண்­டு­கோள் விடுத்­த­னர்.

தோக்கியோவில் நடைபெறும் ஐரோப்­பிய ஒன்­றிய-ஜப்­பா­னிய உச்­ச­நிலை மாநாட்­டில் சீனா­வைப் பற்றி இழி­வா­கப் பேச­வேண்­டாம் என்று பெய்­ஜிங் எச்­ச­ரிக்கை விடுத்த மறு­நாள் ஐரோப்­பி­யத் தலை­வர்­க­ளின் இந்த வேண்­டு­கோள் வெளி­வந்­திருக்கிறது.