தீப்பற்றிய விமானத்தில் இருந்து தப்பிப் பிழைத்த 122 பேர்

தீப்பற்றிய விமானத்தில் இருந்து தப்பிப் பிழைத்த 122 பேர்

1 mins read
cd23e76e-e53d-4588-8265-b6b672836749
ஏர்பஸ் 319 ரக விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் கூறியது. படம்: எஃப் ஏடிஐஐஐ ஏவியேஷன்/டுவிட்டர் -

சோங்­சிங்: சீனா­வின் திபெத் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான விமா­னம் ஒன்று சோங்­சிங்­கில் இருந்து நேற்று புறப்­பட இருந்த நிலையில் தீப்­பி­டித்­தது.

அதனையடுத்து விமானத்தைக் கிளப்பும் முயற்சி கைவிடப்பட்டது.

சம்­ப­வத்­தில் யாரும் மாண்­ட­தா­கத் தக­வல் இல்லை. 113 பய­ணி­க­ளு­டன் ஒன்­பது விமா­னச் சிப்­பந்­தி­கள் அதில் இருந்­த­னர்.

அவர்­களில் சில­ருக்கு லேசான காயங்­கள் ஏற்­பட்­ட­தாக விமான நிறு­வ­னம் தெரி­வித்­தது. ஆனால் காய­ம­டைந்­தோர் எண்­ணிக்­கையை அது வெளி­யி­ட­வில்லை.

பயணிகள் விமானம் தீப்பிடித்த சம்­ப­வத்­தை­ய­டுத்து சோங்சிங் அனைத்துலக விமான நிலை­யத்­தின் ஓடு­பாதை ஒன்று மூடப்­பட்­டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.