முதல்முறையாக நிலாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணிலில் செடிகளை வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
அப்போலே 11 விண்வெளி வீரர்கள் நிலாவுக்குச் சென்று பூமிக்குத் திரும்பும்போது, அவர்களுடன் நிலா மண்ணையும் எடுத்துவந்தனர்.
அப்போலோ 11 என்பது பூமியிலிருந்து சந்திரனுக்குச் சென்ற முதல் பயணமாகும். 1969ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ரோங்குடன் மற்ற விண்வெளி வீரர்கள் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
ஃபுளோரிடா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சோதனையில் ஈடுப்பட்டனர்.
பில்லியன் கணக்கான ஆண்டுகளாக விண்வெளி மண்டலத்தில் ஆயிரக்கணக்கான விண்கல்கள் வெடித்தன. இதனால் நிலா மண்ணில் பலவிதமான துண்டுகள் உள்ளன. செடி வளர்ப்பதற்கு இது உகந்ததது அல்ல என்று தான் விஞ்ஞானிகள் நம்பிவந்தனர்.
ஆராய்ச்சியின் முடிவு இப்போது விஞ்ஞான உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பூமியில் உள்ள மண்ணில் வளரும் செடிகளுடன் ஒப்பிடும்போது, நிலா மண்ணில் வளர்க்கப்பட்ட செடிகள் முளைக்க அதிக காலம் பிடிக்கிறது. அதோடு, பெரும்பாலான செடிகள் கோணல்மாணலாக வளர்க்கின்றன.
இருப்பினும், இது ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அடுத்ததாக நிலாவுக்குச் சென்று செடிகளைப் பயிரவேண்டியதுதான் என்கின்றனர் அவர்கள்.

