நுவாக்ஸோவிட் தடுப்பூசிக்கு இன்றுமுதல் பதிந்துகொள்ளலாம்

நுவாக்ஸோவிட் தடுப்பூசிக்கு இன்றுமுதல் பதிந்துகொள்ளலாம்

1 mins read
161071d8-25fa-4b40-ab03-437e68f38d9f
நுவாக்ஸோவிட் தடுப்பூசியை 18 வயது உள்ளவர்களும் அதற்கு மேற்பட்டோரும் இம்மாதம் 18ஆம் தேதியில் இருந்து இதனைச் செலுத்திக்கொள்ளலாம். படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூரில் நுவாக்ஸோவிட் தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பு மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் 'எம்ஆர்என்ஏ' அல்லாத தடுப்பு மருந்தாகும்.

18 வயதும் அதற்கு மேற்பட்டோரும் இம்மாதம் 18ஆம் தேதியில் இருந்து இதனைச் செலுத்திக்கொள்ளலாம்.

'நோவாவேக்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் நுவாக்ஸோவிட் தடுப்பூசிக்குத் தகுதிபெறுவோர் இன்றுமுதல் அதற்குப் பதிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகள் கூடுதல் நோய்த் தடுப்புத் திறன் மிக்கவை என்பதைச் சுகாதார அமைச்சு சுட்டியது.

மருத்துவரீதியாக இவற்றுக்குத் தகுதிபெறாதோர் நுவாக்ஸோவிட் தடுப்பூசி குறித்துப் பரிசீலிக்கலாம் என்று அமைச்சு கூறியது.

தடுப்பூசி செலுத்தப்படும் மற்ற இடங்கள் குறித்த தகவல்களை https://www.vaccine.gov.sg/locations என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.