ரஷ்யக் கப்பல் சேதம்

கியவ்: ருமே­னியா உட­னான உக்­ரே­னின் கடல் எல்­லைக்கு அருகே உள்ள ஸ்னேக் தீவில் ரஷ்ய தள­வா­டக் கப்­பல் ஒன்றை தான் சேதப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக உக்­ரேன் கூறி­யுள்­ளது.

அதே­வே­ளை­யில், மரி­ய­போல் துறை­முக நக­ரில் உள்ள எஃகு ஆலை­யில் சிக்­கிக்­கொண்ட உக்­ரே­னிய ராணுவ வீரர்­க­ளைக் காப்­பாற்­று­மாறு அவர்­க­ளு­டைய உற­வி­னர்­கள் உதவி கோரி­யுள்­ள­னர்.

கருங்­க­ட­லில் உள்ள ஸ்னேக் தீவில் அண்­மைக் கால­மாக நடை­பெற்­று­வ­ரும் சண்டை, மேற்கு கருங்­க­டல் கரை­யோ­ரப் பகு­தி­யைக் கைப்­பற்­று­வ­தற்­கான யுத்­த­மாக மாற­லாம் என்று தற்­காப்பு அதி­கா­ரி­கள் சிலர் கூறு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், ரஷ்­யக் கப்­பல் சேதப்­ப­டுத்­தப்­பட்­டது குறித்து வெளி­யான தக­வல்­களை ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தால் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை. ரஷ்­யத் தற்­காப்பு அமைச்சு இது­கு­றித்து கருத்­து­ரைக்­க­வும் இல்லை.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த தனி­யார் நிறு­வ­ன­மான மெக்­சார் வழங்­கிய துணைக்­கோளப் படங்­கள், ரஷ்யக் கப்­பல் மீது நடத்­தப்­பட்ட ஏவு­க­ணைத் தாக்­கு­த­லின் பின்­வி­ளை­வைக் காட்­டின. ஸ்னேக் தீவி­லுள்ள கட்­ட­டங்­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டதை அப்படங்­கள் காட்­டின.

உக்­ரே­னின் இரண்­டா­வது பெரிய நக­ரான கார்­கிவை சுற்­றி­யுள்ள பகு­தி­யி­லி­ருந்து ரஷ்­யப் படை­களை உக்­ரேன் வெளி­யேற்­றி­ய­தால், போர்க்­க­ளத்­தில் ரஷ்­யா­வுக்­குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.

கார்­கிவ் நக­ருக்­குக் கிழக்கே 40 கிலோ­மீட்­டர் தூரத்­தில் உள்ள ஒரு பகுதி, உக்­ரே­னு­டைய கட்­டுப்­பாட்­டு­க்குள் வந்­தி­ருப்­பதை ராய்ட்­டர்ஸ் செய்­தி­யா­ளர்­கள் உறு­திப்­படுத்­தி­யுள்­ள­னர். கார்­கிவ் அருகே போல்­டவா, டெர்­காக் பகு­தி­களில் ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­களில் இரு­வர் கொல்­லப்­பட்­ட­தாக வட்­டார அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, மரி­ய­போல் நக­ரில் உள்ள எஃகு ஆலை­யில் சிக்­கிக்­கொண்ட உக்­ரே­னிய வீரர்­களை விடு­விக்­கக் கோரி அவர்­க­ளு­டைய உற­வி­னர்­கள் தலை­ந­கர் கியவ்­வில் பேர­ணி­யா­கச் சென்­ற­னர். அந்த எஃகு ஆலையை ரஷ்­யப் படை­கள் இடை­வி­டா­மல் தாக்கின.

இரு மாதங்­க­ளுக்­கும் மேலாக மரி­ய­போல் நகரை முற்­று­கை­யிட்டு வந்­துள்ள ரஷ்­யப் படை­கள், அந்­த ந­கரை கிட்­டத்­தட்ட முழு­மை­யா­கத் தங்­க­ளு­டைய கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வந்­துள்­ள­ன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!