'மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படவேண்டும்'

'மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படவேண்டும்'

1 mins read
52d02832-0fc0-4b1a-9c15-3d6781779440
மகிந்த ராஜபக்சே பிரதமராக இருந்தபோது சென்ற வாரம் அவரின் அதிகாரத்துவ வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் எரிக்கப்பட்ட பேருந்துகள். படம்: ஏஎஃப்பி -

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைதுசெய்ய்பபடவேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இலங்கை அரசாங்கங்கத்தை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சில நாள்களுக்கு முன்பு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர்.

அதைத் தொடர்ந்து புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு ரணில் விக்ரமசிங்கே, திரு மகிந்த ராஜபக்சேவைக் கைதுசெய்யவேண்டும் என்று அவர்கள் சொல்கின்றனர்.

திரு ராஜபக்சேவைப் பதவி விலகச் செய்ய ஆர்ப்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதையொட்டி தங்களைத் தாக்க அவர் தமது ஆதரவாளர்களைத் தூண்டியதாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து திரு விக்ரமசிங்கேயின் அதிகாரத்துவ வீட்டிற்கு வெளியே சில ஆர்ப்பாட்டாக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று (மே 13) திரண்டனர்.

இதற்கு முன்பு ஐந்து முறை பிரதமராகப் பதவி வகித்த அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

திரு விக்ரமசிங்கே, ராஜபக்சேவின் குடும்பத்துடன் நெருக்கமானவர் என்பது அவர்களின் வாதம்.

திரு மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான திரு கோத்தபாய ராஜபக்சே, தற்போது இலங்கையின் அதிபராகப் பதவி வகிக்கிறார்.