தொடர்ந்து ஒலிக்கும் இலங்கை மக்களின் அதிருப்திக் குரல்

கொழும்பு: இலங்­கை­யின் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ரணில் விக்­ர­ம­சிங்க புதிய அமைச்­ச­ர­வையை அமைக்க தீவி­ர­மா­கச் செயல்­பட்டு வரு­கி­றார்.

ஆறாவது முறையாக அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒருபோதும் அவர் முழு தவணையை நிறைவு செய்ததில்லை.

­இந்நி­லை­யில், இலங்கையில் நேற்று 12 மணி நேரத்­துக்கு

ஊர­டங்கு தளர்த்­தப்­பட்­டது.

ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­ட­தற்கு முன்பு அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் ராஜ­பக்சே குடும்­பத்­தின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் இடையே நடந்த மிக மூர்க்­கத்­த­ன­மான மோத­லில் கிட்­டத்­தட்ட

ஒன்­பது பேர் உயி­ரி­ழந்­த­னர்.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே, அப்­போ­தைய பிர­த­மரும் அவ­ரது சகோ­த­ர­ரு­மான மகிந்த ராஜ­பக்சே ஆகி­யோர் பதவி விலக வேண்­டும் என்று குரல் எழுப்பி ஆர்ப்­பாட்­டத்­தில் இலங்கை மக்­கள் கள­மி­றங்­கி­னர்.

இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்ள மிக மோச­மான பொரு­ளி­யல் நெருக்

கடி­நி­லைக்­கும் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் பற்­றாக்­கு­றைக்­கும் ராஜ­பக்சே குடும்­பத்­தி­னர் செய்த ஊழல்தான் கார­ணம் என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் போர்க் கொடி உயர்த்­தி­னர்.

கடந்த பல வாரங்­க­ளாக

அமை­தி­யான முறை­யில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­கள் திடீ­ரென விஸ்­

வ­ரூ­பம் கண்­டன.

தலை­ந­கர் கொழும்­பில் ஆர்ப்­பாட்­டக்­கார்­கள் முகா­மிட்­டி­ருந்த இடங்­க­ளுக்­குள் முன்­னாள் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்­சே­யின் ஆத­ர­

வா­ளர்­கள் நுழைந்து வன்­

மு­றையைக் கட்­ட­வி­ழ்த்துவிட்டனர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் கூடா­ரங்­க­ளுக்­குத் தீவைக்­கப்­பட்­டன. அதை­ய­டுத்து, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை ராஜ­பக்சே ஆத­ர­வா­ளர்­கள் தாக்­கி­னர்.

வெகுண்­டெ­ழுந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் பதி­லடி கொடுக்க, 300க்கும் அதி­க­மா­னோர் காய­முற்­ற­னர். நிலைமை கைமீறி சென்ற பிறகு வேறு வழி­யின்றி மகிந்த ராஜ­பக்சே பதவி வில­கி­னார்.

அவ­ருக்­குப் பதி­லாக ரணில் விக்­ர­ம­சிங்க அப்­ப­த­வி­யைத் தற்­போது வகிக்­கி­றார்.

அமைச்­ச­ர­வையை அமைக்­கும் மிகக் கடு­மை­யான சவாலை எதிர்­நோக்­கும் ரணில், நேற்று நான்கு அமைச்­சர்­களை நிய­மித்­தார்.

பொது நிர்­வாக அமைச்­ச­ராக தினேஷ் குண­வர்­தன, வெளி­யு­றவு அமைச்­ச­ராக பைரிஸ், நகர மேம்­பாடு மற்­றும் வீட­மைப்பு அமைச்­ச­ராக பிர­சன்னா ரண­துங்க, மின்­சார மற்­றும் எரி­சக்தி அமைச்­ச­ராக காஞ்­சனா விஜி­சே­கர ஆகி­யோர் நேற்று பதவி பிர­மா­ணம் எடுத்­துக்­கொண்­ட­னர்.

ரணில் மட்­டுமே ஐக்­கிய தேசிய கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர். அவ­ருக்கு ராஜ­பக்சே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை பொது­சன முன்னணியின் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.

இலங்­கை­யின் பிர­தான எதிர்க்­கட்சி ரணி­லுக்கு ஆத­ரவு வழங்க மறுத்­து­விட்­டது. ஆனால் நாட்­டின் பொரு­ளி­யலை சீரான நிலைக்­குக் கொண்­டு­வர ரணி­லால் அறி­விக்­கப்­படும் திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கப்­போ­வ­தாகப் பல்­வேறு சிறிய கட்­சி­கள் தெரி­வித்­துள்­ளன.

கோத்­த­பாய ராஜ­பக்சே தொடர்ந்து அதி­ப­ராக இருப்­ப­தா­லும் ராஜ­பக்சே குடும்­பத்­தி­ன­ரின் ஆத­ர­வு­டன் ரணில் பிர­த­ம­ராக பதவி ஏற்­றி­ருப்­ப­தா­லும் இது கண்­து­டைப்பு நாட­கம் என்று இலங்கை மக்­க­ளி­டையே பேச்சு நில­வு­கிறது.

இதைப் பிரதிபலிக்கும் வகையில் நேற்று ஊர­டங்கு தளர்த்­தப்­பட்­ட­போது சிலர் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!