ஷங்காய்: கொவிட்-19 நெருக்கடிநிலையை முன்னிட்டு சீனாவின் ஷங்காய் நகரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, பிறகு அவற்றைப் படிப்படியாகத் தளர்த்த அந்நகரத்தின் அதிகாரிகள் இலக்கு கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, ஷங்காய் நகரைக் காட்டிலும் தலைநகர் பெய்ஜிங்கில் கொவிட்-19 குறைவாக இருக்கிறது. ஆனாலும் விடாப்
பிடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிராக அங்கு தொடர்ந்து நட
வடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
25 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஷங்காய் நகரத்தில் விதிக்கப்பட்ட ஆறு மாத முடக்கநிலை இம்மாதத்துடன் முடிவடைகிறது.
கடந்த வாரம் தங்கள் குடி
யிருப்பு வளாகங்களிலிருந்து வெளியேறி சிறிது நேரம் நடைப் பயிற்சியில் ஈடுபடவும் மளிகைப் பொருள்களை வாங்கவும் ஷங்காய் நகரவாசிகள் பலருக்கு
அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது மூன்று நாள்களுக்கு வீட்டிலேயே இருக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் அடுத்த வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்படும் என்று பல குடி
யிருப்புப் பேட்டைகளிடம் இரவோடு இரவாகத் தெரிவிக்கப்பட்டது.

