வடகொரியாவில் கொரோனா தொற்றால் 42 பேர் மரணம்

வடகொரியாவில் கொரோனா தொற்றால் 42 பேர் மரணம்

1 mins read
11872091-0f41-4241-9767-e1f857f0ef08
வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கொவிட்-19 அந்நாட்டு தொழிலாளர் கட்சியின் கூட்டத்தை நடத்தி, அதில் கிருமிப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பேசினார். படம்: ராய்ட்டர்ஸ் -

வடகொரியாவில் இதுவரை கொவிட்-19 தொற்றால் 42 பேர் மாண்டுவிட்டனர்.

அந்த நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நான்கு நாள்கள் ஆகிறது.

கொவிட்-19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர துரித நடவடிக்கை வடகொரியா எடுத்துவருவதாக அதிகாரத்துவ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறியது.

அதனுடன் பொதுமக்களுக்கு தீவிரமாக கிருமிப் பரிசோதனை செய்து வருவதாகவும் அது சொன்னது.

கொவிட்-19 கிருமிப் பரவலால் தம் நாடு பெரும் சிக்கலில் இருப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் சனிக்கிழமை அன்று கூறினார்.

தொற்றுப் பரவலை முடிறியடிக்க அவர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

கூடுதலான 296,180 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

வடகொரியாவில் இதுவரை 820,620 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 324,550 பேருக்கு சிகிச்சை வழங்கப்ட்டு வருகிறது.

ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு உறுதியாக கொரோனா தொற்று உள்ளது என்பதை வடகொரியா தெரிவிக்கவில்லை.