உக்ரேன் தீவிர எதிர் தாக்குதல்

உக்ரேன் தீவிர எதிர் தாக்குதல்

2 mins read
17d48ef7-c5c4-4cbe-a04f-7addcd28ff00
வடகிழக்குப் பகுதிகளை உக்ரேனியப் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ் -

கியவ்: ரஷ்­யா­வின் கட்­டுப்­பாட்­டில் உள்ள கிழக்கு உக்­ரே­னின் இசி­யம் நக­ருக்கு அரு­கில் உக்­ரே­னியப் படை­யி­னர் எதிர்த் தாக்­கு­த­லைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அதன் ஆளு­நர் கூறி­னார்.

இது, டோன்­பாஸ் பகு­தியை முழு­மை­யா­கக் கைப்­பற்­றும் ர‌ஷ்­யா­வின் திட்­டங்­க­ளுக்­குக் கடு­மை­யான பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

கியவ்வை முழு­மை­யா­கக் கைப்­பற்ற முடி­யாத ர‌ஷ்­யப் படை­கள் சென்ற 19ஆம் தேதி முதல், ர‌ஷ்ய ஆத­ர­வா­ளர்­கள் நிறைந்த டோன்­பாஸ் பகு­தி­யைக் கைப்­பற்­று­வ­தில் மும்­மு­ரம் காட்­டின.

இதற்­கி­டையே, வட­கி­ழக்கு உக்­ரே­னின் கார்­கிவ் பகு­தியை உக்­ரே­னியப் படை­கள் மீண்­டும் கைப்­பற்­றிய பிறகு, இரண்டு நாள்­களுக்கு முன் அங்­கி­ருந்­தும் ர‌ஷ்­யப் படை­கள் வெளி­யே­றின.

டோன்­பா­ஸில் வெற்றி பெறு­வ­தற்கு ர‌ஷ்யா தொடர்ந்து முயற்­சிப்­ப­தா­க­வும் அத­னால், அங்கு மிக­வும் கடி­ன­மான சூழல் நில­வு­வ­தா­க­வும் உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி கூறி­னார்.

இந்­நி­லை­யில், டோன்­பாஸ் உள்­ளிட்ட பகு­தி­களில் உக்­ரே­னிய ராணு­வத் தளங்­கள்­மீது தமது படை­கள் நடத்­திய ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் குறைந்­தது 100 உக்ரேனியப் படை­யி­னர் மாண்­டு­விட்­ட­தாக ர‌ஷ்யா கூறி­யுள்­ளது.

'புட்­டி­னைப் பதவி நீக்க சதி'

ர‌ஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னைப் பத­வி­யில் இருந்து நீக்கு­வதற்­கான சதி நடை­பெற்று வரு­வதா­க­வும் அதை நிறுத்­த­மு­டி­யாது என்­றும் உக்­ரே­னின் உயர் ராணுவ அதி­காரி சொன்­னார்.

உக்­ரே­னின் ராணு­வத் தள­பதி கைரிலோ புடா­னோவ் ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்­டி­யில், "ஆகஸ்ட் நடுப்­ப­கு­தி­யில் உக்­ரேன்-ர‌ஷ்யா போர் ஒரு திருப்­பு­மு­னையை எட்­டும் என்­றும் இந்த ஆண்டு இறு­திக்­குள் போர் முடி­வ­டை­யக்கூடும்," என்றார்.

இப்போரில் ர‌ஷ்யா தோற்­று­விட்­டால், புட்­டின் பத­வி­யில் இருந்து நீக்­கப்­ப­டு­வார் என்­றும் அவர் சொன்­னார். மேலும் புட்­டி­னுக்­குப் புற்­று­நோய் உள்ளிட்ட நோய்­கள் இருப்­ப­தா­க­வும் உள­வி­யல், உடல்­நல ரீதி­யாக புட்டின் மிக­வும் மோச­மான நிலை­யில் உள்­ள­தா­க­வும் அவர் கூறினார்.