‌ஷாங்காயில் வர்த்தகங்கள் மீண்டும் செயல்பட தொடக்கம்

‌ஷாங்காயில் வர்த்தகங்கள் மீண்டும் செயல்பட தொடக்கம்

1 mins read
469964c4-424d-4636-9b61-1dd3f88c31b0
-

‌ஷாங்­காய்: ஆறு வாரங்­க­ளுக்கு மேற்­பட்ட கடு­மை­யான முடக்­க­நிலைக்­குப் பிறகு ‌ஷாங்­கா­யில் இன்று முதல் வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் படிப்­ப­டி­யாக மீண்­டும் தொடங்­கு­கிறது.

"கடைத்­தொ­கு­தி­கள், பேரங்­கா­டி­கள் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கும். அங்கு 'ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட' முறை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

"முடித் திருத்­த­கங்­கள், காய்கறிச் சந்­தை­களில் குறிப்­பிட்ட அளவு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அனு­ம­தி­யுண்டு," என்று செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்­றில் பேசிய ‌ஷாங்­காய் நக­ரத் துணை மேயர் சென் டோங் சொன்­னார்.

அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை குறித்த எந்த விவ­ரத்­தை­யும் அவர் தெரி­விக்­க­வில்லை.

‌ஷாங்­கா­யில் நேற்று 1,369 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­டன. முக்­கி­ய­மாக, வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­க­ளுக்கு வெளியே தொற்­றுச் சம்­ப­வங்­கள் எது­வும் பதி­வா­க­வில்லை.

இதற்­கி­டையே, பெய்­ஜிங்­கில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நடப்­பில் உள்­ளன.

பொழு­து­போக்கு கூடங்­கள் மூடப்­பட்­டுள்­ளன. உண­வ­கங்­களில் உண­வ­ருந்த தடை, வீட்­டில் இருந்து வேலை செய்­யும் நடை­முறை என பெய்­ஜிங்­கில் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­கள் நீடிக்­கின்­றன.